இலங்கை சொப்லொஜிக் குழுமம் தனது நிறுவனத்தின் உயரதிகாரிகளின் சம்பளத்தில் 20 -30 வீதத்தை குறைத்துள்ளது.
கொவிட் 19 தொற்று அபாயம் காரணமாக வணிக நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பள குறைப்பு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐம்பதாயிரம் ரூபாவுக்கும் குறைவான சம்பளம் பெறுவோருக்கு இச்சம்பள குறைப்பு இடம்பெறாது. எனினும் மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் மிகை ஊதியம் என்பனவும் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.