சம்பளம் (இந்திய தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்தில் முக்கிய திருத்தம்

16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதை அரசாங்கம் தடை செய்துள்ளது.

– சம்பளம் ( இந்திய தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்திலும் திருத்தத்தை மேற்கொள்ளவும் (Cap 135) Minimum Wages (Indian Labour) ordinance amendment Act அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாக ஊழியர்களை பணியில் ஈடுத்தக்கூடிய ஆகக்குறைந்த வயது 16 என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்.

2020 ஜுன் மாதம் 12ஆம் திகதியன்று இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாகவும் நாட்டை மேம்படுத்தும் சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை பிரகடனத்தில் ‘நெனபல சஹித்த லமா பரபுரக்’ என்ற (பாண்டித்தியமிக்க தலைமுறையினர்) தொனிப்பொருளின் கீழ் குறிப்பிபடப்பட்ட வகையில் நாட்டில் அனைத்து சிறுவர்களுக்கும் சர்வதேச சிறுவர் உரிமை பிரகடனத்திற்கு அமைய கிடைக்க வேண்டிய சிறப்புரிமைகள் மற்றும் உரிமைகளை உறுதிசெய்வதற்காக அவசியம் பாடசாலைக் கல்வி வயதிற்கு அமைவான வகையில் ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தம் ஆகக்குறைந்த வயதெல்லையை 16 ஆக அதிகரிக்கும் நோக்கில் கீழ்கண்ட தொழிலாளர் கட்டளைச்சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம வழங்கியுள்ளது.

1. 1954ஆம் ஆண்டு இலக்கம் 13 இன் கீழான (129 அதிகாரத்திற்கு அமைவாக ) வர்த்தக நிலையங்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பான (சேவை மற்றும் சம்பள முறைப்படுத்துதல்) சட்டம்;;:

2. 1956ஆம் ஆண்டு இலக்கம் 47 இன் கீழான பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்தும் சட்டம்

3. (135 அதிகாரம் – ) ஆகக் கூடிய சம்பளம் ( இந்திய தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டம் (Cap 135) Minimum Wages (Indian Labour) ordinance amendment Act

4. 1942ஆம் ஆண்டு இலக்கம் 45 இன் கீழான தொழிற்சாலை கட்டளைச் சட்டம்

5. 1958 ஆண்டு இலக்கம் 15 இன் கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டத்தில் ஏற்பாடுகளுக்கு அமைவாக 1958.10.31 தினத்தன்று அரசாங்க அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் உள்ள கட்டளை

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435