பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
சம்பள அதிகரிப்பு விடயத்தில் பெருந்தோட்ட யாக்கங்கள் இன்னும் இணக்கப்பாட்டுக்கு வராத காரணத்தினால் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்pன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இந்த தீர்மானத்தை அறிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த அடிப்படை சம்களம் 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
எனினும் 600 ரூபாவிற்கு மேல் அதனை அதிகரிக்க முடியாது என்று பெருந்தோட்ட யாக்கங்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றன.
இந்த நிலையில் தங்களது கோரிக்கைக்கு பெருந்தோட்ட யாக்கங்கள் இணங்கும் வரையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளுமாறு தொழிலாளர் காங்கிரஸ் கோரியுள்ளது.
இதற்கு ஏனைய தொழிற்சங்கங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.