சம்பள மீளாய்வு ஆணைக்குழு ஜனாதிபதி தலைமையில் இன்று கூடுகிறது

அரச சேவையினரின் சம்பள மீளாய்வு தொடர்பான விசேட ஆணைக்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முதல் முறையாக கூடவுள்ளது.

இந்த ஆணைக்குழுக்கு 15 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரச நிர்வாக சேவையின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியான எஸ்.ரணுக்கே இதன் தலைவராக செயற்படுகிறார்.

அரச சேவை கட்டமைப்பையும் மதிப்பீடு செய்து புதிய சம்பள கட்டமைப்பை தயாரிப்பதே ஆணைக்குழுவின் நோக்கமாகும்.

இது தொடர்பாக ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு இன்று தெளிவுபடுத்தப்படவுள்ளது.

அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாட்டை நீக்கி தேசிய சம்பள கொள்கை ஒன்றை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான ஜனாதிபதியினால் இன்று நியமன கடிதங்களும் வழங்கப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435