26 ஆயிரம் அஞ்சல் பணியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்

இந்த நிலையில், 26 ஆயிரம் அஞ்சல் பணியாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புகள் சேவை அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் எஸ்.கே.காரியவசம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி நள்ளிரவு முதல் 5ஆம் திகதி நள்ளிரவு வரை இலங்கை முழுவதுமுள்ள அனைத்து அஞ்சல் நிலைய அதிபர்களினால் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளப்பட்டது.

அஞ்சல் பணியாளர்கள் முன்னெடுத்த இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு குறித்து அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புகள் சேவை அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் எஸ்.கே.காரியவசம் எமது இணைத்தளத்துக்கு விளக்கமளிக்கிறார்.

கேள்வி – பணிப்புறக்கணிப்புக்கான காரணம் என்ன?

பதில் – ஆட்சேர்ப்பு முறைமை தொடர்பான திருத்தத்துக்கு கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி அமைச்சர் சரம் அமுனுகம வழங்கிய உறுதிமொழிக்கு அமைய அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து, நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டு 5 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் அது நிறைவேற்றப்படாதைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே கடந்த 3ஆம் திகதி முதல் 5 ஆம் திகதிவரை பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் பணிப்புறக்கணிப்பில் 653 அஞ்சல் நிலையங்களிலலும், 43 நிர்வாக நிலையங்களிலும் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது. இதற்கு ஏனைய சில தொழிற்சங்கங்களும் ஆதரவளித்தன.

26 ஆயிரம் அஞ்சல் பணியாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என இந்தப் பணிப்புறக்கணிப்பின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

அஞ்சதுறை அமைச்சரும், அமைச்சர் சரத் அமுனுகமவும் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேள்வி – உங்களது கோரிக்கைகள் யாவை?

பதில் – 2013 ஆம் ஆண்டின் பின்னர் அஞ்சல் சேவையில் இணைக்கப்பட்ட அஞ்சல் நிலைய அதிபர்களின் நியமனம், 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், நிரந்தமாக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஆயிரத்து 484 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

சம்பள உயர்வு கிடைக்கவில்லை, சொத்துக்கள் தொடர்பான கடன்களைப் பெற முடியாது, வெளிநாட்டு பயண விடுமுறையைப் பெற்றுக்கொள்ள முடியாமை மற்றும் தொழிலின் நிச்சயமற்ற தன்மையும் உள்ளது.

கேள்வி – இந்தப் போராட்டத்துக்கு தீர்வு கிடைக்காவிட்டால் உங்களுடைய நடவடிக்கை என்ன?

பதில் – இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தொடர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புகள் சேவை அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் எஸ்.கே.காரியவசம் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435