சம்பள விடயத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களிடையே சந்தேகம் உள்ளது

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தற்போது மக்களிi;டயே சந்தேக நிலைமை ஏற்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் உபதலைவர் எஸ்.அருள்சாமி தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தற்போது மக்களிi;டயே சந்தேக நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, இதனைத் தீர்க்கும் நோக்கிலே இந்த ஊடக சந்திப்பை நடத்துவதாக அருள்சாமி குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினை அல்ல. சம்பளம் என்பது தொழிற்சங்க உரிமையாகும். கடந்த 80ஆண்டுகளாக இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தொழிலாளர்களின் உரிமைகளுக்காய் போரடி வந்திருக்கிறது.

ஜுலைமாத வாழ்க்கை செலவை எடுத்து கொண்டால் ஒரு கணவன் மனைவி இரண்டு குழந்தைகள் வாழ்வதற்கு 812ரூபா தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு இதில் வைத்திய செலவு பாடசாலை செலவு போன்றவற்றை சேர்த்தால் 912ரூபா தேவைபடுகிறது. இந்த புள்ளிவிபரங்களைகூட நாங்கள் முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைத்துள்ளோம் என அருள்சாமி கூறியுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினால், சம்பள உயர்வை பெறுவதற்காக போராடலாம் என சிலர் கூறுகின்றனர். ஆனால், தொழிற்சங்க தலைவர்கள் என்ற அடிப்படையிலே ஒன்றுபட்டு குரல் கொடுத்தால் ஆயிரம் ருபா அல்ல இரண்டாயிரம் ருபா வேண்டுமானாலும் பெறலாம் அதனை இல்லாமல் செய்தது சில தொழிறங்க அரசியல்வாதிகளே என்றும் அவர் கூறியுள்ளார்.

பண்டிகைகாலம் ஆரம்பித்ததினால் முதலாளிமார் சம்மேளனத்தின் நிறைவேற்று அதிகாரிகள் பலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமையால் அவர்கள் நாடு திரும்பியவுடன் ஜனவரிமாதம் முதல் வாரத்திலே கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை மீள ஆரம்பிக்கப்படும் என அருள்சாமி கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435