இன்று சர்வதேச மே தினம் அல்லது உலக தொழிலாளர் தினம். உழைக்கும் மக்களின் போராட்டகுணமிக்க வீரியம் அதன் உரிமைகளுக்காகப் பேசும் நாள் அது. ஆயினும்கூட, உலகம் முன்னெப்போது் இல்லாத வகையில் உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொள்ளும் ஒரு நேரத்தில், உலகத் தொழிலாள வர்க்கம் முன்பை விட அதிக சவால்களை எதிர்கொள்கிறது.
தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக சுதந்திரமாக குரல்கொடுக்க, தங்கள் வர்க்கத்தின் ஒன்றிணைந்த பலத்தை ஆளும்தரப்பினருக்கு எடுத்துரைக்க முடியாத நிலை இந்த கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ளது.
இன்றைய மே தினத்தை ஒவ்வொரு இடங்களில் கொண்டாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகளாவிய தொற்றுநோய் காரணமாக, ஏற்றுமதி தொழில் முற்றிலும் வீழ்ச்சியடைந்துவிட்டது. இதனால் தொழிலாளர்கள் தான் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். வர்த்தகர்கள் தங்கள் பதிவுகள் இரத்து செய்யப்பட்டு இழப்பு ஏற்படுவதாக கூறுகிறார்கள். எந்தவொரு வருமானமும் இல்லை என்று கூறும்நிலையில், தொழிலாளர்கள் அனுபவிக்கும் அடிப்படை உரிமைகளை மறுக்க சட்டங்கள் திருத்தப்படுகின்றன. உலகளவில் இந்த நெருக்கடியை சமாளிக்க கொள்வனவாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க, தொழிற்சங்கங்களும் சர்வதேச தொழிலாளர் அமைப்பும் இணைந்து செயல்படுகின்றன.
உலகளாவிய தொற்றில் இருந்து மீள்வதற்கு அதன் சவால்களை எதிர் கொள்வதற்காக தொழிலாளர்கள் வர்க்கமும் முதலாளிகளும் உலக மக்களும், முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில, இலங்கைத்தீவில் தொழிலாளர்கள் வர்க்கத்தினரை முடக்கி தங்களது பைகளை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எவ்வளவு துன்பகரமானது