சர்வதேச நாடுகளில் பட்டம் பெற்ற மாணவர்களை அரச சேவையில் உள்ளீர்ப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பட்டதாரிகளிடம் இருந்து 4,100 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நாயகம் எப்.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
அவர்களை அரச சேவையில் உள்ளீர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதனடிப்படையில் எதிர்காலத்தில் நேர்முகத் தேர்வு வைத்து அவர்கள் பின்தங்கிய பகுதிகளில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட கற்பித்தல் பணிகளுக்காக உள்ளீர்க்கப்படவுள்ளனர்.
அந்தவகையில், சர்வதேச கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு இந் நாட்டில் தொழிலைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி – நியுஸ்பர்ஸ்ட்