சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டிருந்த கடன் தொகை இன்னும் இரு வார காலத்திற்குள் கிடைக்கும் என்று இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது நாடு முகம்கொடுக்கும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக 100-200 கோடி டொலர் பெறுமதியான கடனை இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
இக்கடன் தொகையை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றது.இறுதிக்கட்ட கலந்துரையாடல் நியுயோர்க்கில் நடபெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கலந்துரையாடலானது கடன் தொகையை பெற்றுகொடுப்பது தொடர்பான இறுதித்தீர்மானத்திற்காக நடத்தப்படுகிறது என்று திரைசேரியின் செயலாளர் ஆர்.எம்.எஸ்.சமரதுங்க தெரிவித்தார். மேலும் கடன் தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு முதல்நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்கு இலகுவாக்க தற்போதுள்ள தடைகள் நீக்கப்படவேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் கருத்தாக உள்ளது என்றும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
வேலைத்தளம்