
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்வரை அனைத்து பயணிகள் மற்றும் கப்பல் போக்குவரத்துக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணிகள் விமானம் மற்றும் கப்பல்கள் அனைத்தும் இலங்கைக்குள் நுழைவதற்கான தடையானது அரசாங்க மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பயணிகளின் விமானங்களுக் இரண்டு வருடங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வரும்வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.