சர்வதேச விமான போக்குவரத்து மறுஅறிவித்தல் வரை நிறுத்தம் – சவுதி

மறு அறிவித்தல் வரை சர்வதேச விமான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

விமான போக்குவரத்து படிப்படியாக மீண்டும் தொடங்கும் மற்றும் அதிகாரப்பூர்வ ஊடகங்களினூடாக போக்குவரத்து அட்டவணை வௌியிடப்படும் என்று சவுதி விமான சேவை அதன் அதிகாரபூர்வ டிவிட்டரினூடாக அறிவித்துள்ளது.

தற்போது அவ்தா திட்டத்தின் கீழ் இயங்கும் தனிமைப்படுத்தல் நடவடிக்கையின் கீழ் வௌிநாடுகளில் இருந்து சவுதி பிரஜைகளை ஏற்றி வரும் விமானங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் .

இந்த நேரத்தில் அனுமதிக்கப்பட்ட சர்வதேச விமானங்கள் “அவ்தா” (திரும்ப) திட்டத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும் சேவைகளைப் பெறும் தனிமைப்படுத்தப்பட்ட சவுதி குடிமக்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள் மட்டுமே என்று அது கூறியுள்ளது.

சவுதியா தனது உள்நாட்டு விமான சேவை அட்டவணையை அறிவித்து, ஜெத்தா மற்றும் ஹெயில் இடையேயான விமானங்கள் இன்று (ஜூன் 15 ூ முதல் இயக்கத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உள்நாட்டு விமானங்கள் மீண்டும் தொடங்கியதால் சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் (GACA) ஐந்து உள்நாட்டு விமான நிலையங்களை இணைத்துள்ளது. அவையாவன பிஷா, தைஃப், யான்பு, ஹஃப்ர் அல் படின் மற்றும் ஷரூரா விமான நிலையங்கள் ஆகும்.

சுகாதார அதிகாரிகளுடனான ஆலோசனைகள் மற்றும் புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இணங்க GACA உள்நாட்டு விமானங்களை மே 31 அன்று மீண்டும் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435