சவுதியில் உயிரிழந்த இலங்கையரின் மரணத்தில் சந்தேகம்: சடலம் இதுவரை கிடைக்கவில்லை

சவுதி அரேபியாவில் வாகன விபத்தில் உயிரிழந்;தவரின் சடலத்தை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்;ள வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துனகதெனிய – வெலிபென்னகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பாலித விஜேபண்டார அதிகாரி என்ற 52 வயதுடையவரே இந்த விபத்;தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து கடந்த 17ஆம் திகதி இடம்பெற்றதாக கூறப்படுகிறது. சவுதி அரேபியாவின் ஜேட்டா நகருக்கு அருகில் இந்;த விபத்து இடம்பெற்றதாக அங்குள்ள இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலித விஜேபண்டார சவுதியில் 23 வருடங்களாக சேவையாற்றியுள்ளதுடன், இறுதியில் ஒரே இடத்தில் 15 வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.

அவர் கனரக வாகன சாரதியாக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு விபத்தொன்று நேர்ந்துள்ளது என அவர் சேவையாற்றிய நிறுவனமோ அல்லது அந்நாட்டு தூதரக காரியாலயமோ தற்போதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

பாலித விஜேபண்டாரவின் உறவினர்கள், அவர் தொடர்பான தகவல்களை வினவுவதற்காக இலங்;கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சென்ற முதலாவது சந்தர்ப்பத்தில் அவர் குறித்த தகவலை வழங்கியிருக்கவில்லை என்றும், இரண்டாவது முறை சென்றபோது, அவர் இறந்;துவிட்டதாக மாத்திரம் தெரிவிக்கப்பட்டதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435