சவுதி அரேபியாவில், அந்நாட்டு அரசாங்கத்தின் வழக்குத் தொடரும் அதிகார சபையினால் அந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் முக்கியத்துவமிக்க புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்ற அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தப் புதிய சட்டத்திற்கு அமைய, சவுதி அரேபியாவில் கடைப்பிடிக்கப்படும் சமயத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்களையோ அல்லது சமயத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் பதிவிடும் சமூக வலைதள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவோ அல்லது 3 மில்லியன் ரியால் அபராதம் விதி;க்கவோ தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் வாழும் ரயீக் படாவி என்பவர் இஸ்லாம் சமயத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக கடந்த 2012ஆம் ஆண்டு 10 வருட சிறைத் தண்டனையுடன் 1,000 கசை அடியும் சவுதி அரசாங்கத்தின் வழக்குத் தொடரும் அதிகார சபையினால் தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வாறான தண்டனைகளை விதிப்பதன் ஊடாக சமயத்திற்கு எதிராக நடவடிக்;கை மேற்கொள்வோரை கட்டுப்படுத்த சவுதி அரேபியா எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பகிறது.