வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் சவுதி அரேபியா முதன் முதலாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
எண்ணெய் உற்பத்தியில் மட்டும் அல்லாது சுற்றுலாத்துறையின் மூலமும் வருவாயை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த செயல்பாட்டை சவுதி அரேபியா மேற்கொள்ளவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நேற்று 49 நாடுகளுக்கான நுழைவு அனுமதியினை இலகுவாக்குவதுடன், வெளிநாட்டு பெண்களின் ஆடை குறித்து பின்பற்றிவந்த கடினமான முறைமையை தளர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம் என சவுதி அரேபியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் அகமட் அல்-கஹதீப் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும், யாத்திரிகர்கள், வர்த்தகர்கள், வேலைவாய்ப்பை பெற்ற பணியாளர்கள் ஆகியோருக்கே நுழைவு அனுமதி இலகுவாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தற்சமயம் 3 சதவீதமான சுற்றலாப் பயணிகளின் வருகையினை எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் 10 சதவீதமாக உயர்த்த சவுதி அரேபிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சவுதி அரேபியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் யுனஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து பாரபம்பரிய தலங்கள் மற்றும் உள்ளுர் கலாச்சாரம் என்பன அவர்களை மிகவும் கவரும் என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.