சவுதி அரேபியாவில் அமுலாக்கப்பட்டுள்ள சர்வதேச போக்குவரத்துத் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் தளர்த்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவிய நிலையில் நாடுகளுக்கிடையிலான போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டது. தடையை தளர்த்துவதற்கான வாய்ப்பு இதுவரை கிடைக்காதநிலையில் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது இரண்டாம் அலையாக நாடுகளில் பரவி வருகிறது. எனவே விதிப்பட்ட போக்குவரத்து தடைக் கட்டுப்பாடுகளை அடுத்த ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சவுதி அரேபிய அதிகாரிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையொன்றில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் வான்வழி மற்றும் கடல்வழி போக்குவரத்துகள் ஆரம்பிக்கும் என்று அதிகாரிகள் குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்துத் தளர்வு தொடர்பான திகதி ஜனவரி முதலாம் திகதிக்கு 30 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று உள்நாட்டு பத்திரிகைகள் செய்தி வௌியிட்டுள்ளன.