சவுதி கிறீன் கார்ட்டை பெற நீங்கள் தயாரா?

சவுதி அரசாங்கம் கிறீன் கார்ட் அறிமுகம் செய்யும் திட்டம் இப்பொழுது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சவுதி பிரஜையொருவருக்கு உரிமையில்லாத வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்வதற்கு, இந்த கிறீன் கார்ட் உரிமையாளர் வருடாந்தம் 14200 ரியாலை சவுதி அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும்.

இதேவேளை, சவுதி பிஜையொருவருக்கு கிடைக்கும் பயன்கள் பல இந்த கிறீன் கார்ட் உரிமையாளருக்கு கிடைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறீன் கார்ட் உரிமையாளர் ஒருவர் வருடாந்தம் 14200 ரியாலை வருடாந்த சவுதி அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்னும் இந்த நிபந்தனைகளுக்கு உடன்படும் வெளிநாட்டவர்களுக்கு, நிரந்தர வசிப்பிடத்தை பெற்றுக் கொள்ளவும், சொத்துரிமைகளை வைத்திருக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், தன்னுடைய வியாபார நிறுவனமொன்றை ஆரம்பிக்கவும், ஓய்வுதியம், அரசாங்கத்தினால் வழங்கப்படுவதுடன், சுகாதார கொடுப்பனவுகள், கல்வி என்பனவற்றை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். தொழில்களை மாற்றிக் கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

இந்த சேவைகள் தவிர, தமது குடும்ப உறுப்பினர்களுக்கு அவசர வீசா வழங்கவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. பணிப்பெண்களுக்கான வீசா இரண்டை விநியோகிக்கவும் இந்த கிறீன் கார்ட் உரிமையாளருக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435