இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த தொழிலாளர் சட்டங்களில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டு நேற்று வௌியிட்டுள்ளது சவுதி அரேபியா.
அதற்கமைய, இனி சவுதி அரேபியாவில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் வேறு பணியிடங்களில் இணைவதற்கும், நாட்டை விட்டு வௌியேற மற்றும் மறுநுழைவுக்கான அனுமதியை தொழில் வழங்குநர்களிடமிருந்து அனுமதி பெறாமல் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இத் தொழிலாளர் சீர்திருத்த முயற்சியானது தொழிலாளர்கள் மற்றும் தொழில் வழங்குநர்களுக்கு இடையிலான ஒப்பந்த உறவை மேம்படுத்தல் மற்றும் நாட்டில் கவர்ச்சிகரமானதொழிற்ச சந்தையை நிறுவுதல் ஆகிய நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது என மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
சவுதி தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் எதிர்வரும் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது. இது அனைத்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தொழில் தருநர்கள் ஆகிய இருவருக்கிடையிலலான ஒப்பந்த உறவில் இரு தரப்பினருடைய உரிமைகளை கவனிக்கும் வகையில் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் மொத்த சனத்தொகை 34.8 மில்லியன்களாகும். இதில் 10.5 மில்லியன்கள் புலம்பெயர் தொழிலாளர்களாவர். புலம்பெயர் தொழிலாளர்களது தொழில் ஒப்பந்த காலம் நிறைவடைந்த வௌியேறுதல் மற்றும் மீள் நுழைதலுக்கான விஸாவுக்கு விண்ணப்பித்த பின்னர் தொழில் வழங்குநர்களின் அனுமதியின்றி நாட்டுக்கு வௌியில் செல்ல புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிமையுண்டு என்கிறது அமைச்சு.
இறுதி வெளியேறும் விசா சீர்திருத்தங்கள் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் முடிந்தபின் புலம்பெயர் தொழிலாளர் நாட்டை விட்டு வௌியேற அனுமதிக்கப்படும். இவ்வணுமதி மின்னணு முறையில் அறிவிக்கப்படும். தொழில் வழங்குநர்களின் அனுமதியின்றி ஒப்பந்த விதிகளை மீறும் பட்சத்தில் அதன் விளைவுகளை குறித்த நபரே பொறுப்பேற்க வேண்டும்.
தொழிலாளர் சந்தையின் நெகிழ்வுத்தன்மை, செயல்திறன் மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்க இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவ்வமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.