சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

ஐந்து வருட டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த போதும் அரச வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில் யாழ். சுன்னாகத்தில் அமைந்துள்ள லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று (20) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கடந்த 46 நாட்களாக வகுப்புப் பகிஸ்கரிப்பில் ஈடுபட் டுவந்த லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று (21) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், கல்லூரியில் முறைகேடுகள் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டினர்.

அத்துடன், தமது பிரச்சினைகள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கமளிக்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதுடன், சுன்னாகம் அனல் மின் நிலையத்தை ஒட்டியதாக கல்லூரி அமைந்துள்ளதால், மூலிகைச் செடிகளைப் பயிரிட முடியாதுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435