கட்டாரில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறுநீரக பரிசோதனையை விரைவில்
மேற்கொள்ள அந்நாட்டு வைத்தியர் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோர் பணிபுரியும் வாய்ப்பை இழப்பர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக மயமாக்கலுடன் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால் அதிகரித்துவரும் நோய்கள் காரணமாக இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கட்டார் ட்ரிபியூட் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை காலமும் வௌிநாட்டு பணியாளர்களை தொழில் இணைப்பதற்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளில் எயிட்ஸ் தொற்று, காசநோய் மற்றும் ஏனைய சுவாசம் தொடர்பான நோய்கள், இரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய நோய், செங்கமாலை தொடர்பிலேயே அதிகமாக கவனம் செலுத்தப்பட்ட போதிலும் சிறுநீரக நோய் காரணமாக தொழிலாளரின் செயற்றிறனுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் அந்நோய் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவதாக அந்நாட்டு வைத்தியர் ஆணைக்குழுவின் தலைவர கலாநிதி இப்ராஹிம் அல் ஷார் கருத்து வௌியிட்டுள்ளார்.
மேலும், குறித்த மருத்துவ பரிசோதனைக்கு நாளாந்தும் விண்ணப்பித்த 3500 புலம்பெயர் தொழிலாளர் வருகைத்தருகின்றனர் என்றும் கட்டாரிற்கு வரும் தொழிலாளர் மற்றுமன்றி சுற்றலா பிரயாணிகளும் மருத்துவ பரிசோதனையில் சித்தியடைந்தால் மட்டுமே தங்குவதற்கான அனுமதியட்டை வழங்கப்படும் என்றும் அவ்வதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கை கட்டார் நாட்டுக்கு செல்ல முதல் மருத்துவ பரிசோதனை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.