சில இலங்கையர்கள் மட்டுமே நாடு திரும்ப விருப்பம்- அமீரகத்திற்கான தூதுவர்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் குறைந்த எண்ணிக்கையானவர்களே கொவிட் 19 பரவல் காரணமாக தாய்நாடு திரும்ப விரும்பினர். புதிய தொழில்வாய்ப்புக்களை பெற்ற பலர் தொடர்ந்தும் அங்கு மகிழ்ச்சியுடன் பணியாற்றுகின்றனர் என்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கை தூதுவர் மல்ராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அமீரக இணையதளமான கல்ப் டுடேவுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அச்செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

புதிய தொழில்வாய்ப்பு

சுமார் 300,000 இலங்கையர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றுகின்றனர். அவர்களில் 10 சதவீதமானவர்கள் (சுமார் 25,000 பேர் மட்டுமே இலங்கை திரும்ப பதிவு செய்தனர். ஐக்கிய அரபு இராச்சியத்தில் பொருளாதாரம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அவர்களில் பலருக்கு தற்போது புதிய தொழில்வாய்ப்புகள் கிடைத்துள்ளமையினால் நாடு திரும்பும் எண்ணத்தை கைவிட்டுள்ளனர்.

கடந்த வாரம் தூதரகம் பதிவு செய்த இரண்டாயிரம் பேரை தொடர்புகொண்டபோது தூதரகம் ஏற்பாடு செய்திருந்த விசேட விமானத்தினூடாக நாடு திரும்ப 547 பேர் மட்டுமே நாடு திரும்ப முன்வந்தனர்.

நாட்டுக்கு மீள அழைக்கும் திட்டம்

நாடு திரும்ப பதிவு செய்தவர்களில் பெரும்பாலானர்வர்கள் தமது தொழில்வாய்ப்பை இழந்தவர்கள். மீண்டும் புதிய தொழில் கிடைத்தவுடன் அவர்கள் நாடு திரும்பும் எண்ணத்தை கைவிட்டுள்ளனர். புதிய தொழில்வாய்ப்புகள் ஏற்கனவே கிடைத்த சம்பளத்தையே வழங்காவிட்டாலும் தொடர்ந்தும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றுமாறு நான் அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறேன். காரணம் எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் இரு வருடங்களுக்கு உலக பொருளாதாரம் பிரச்சினைக்குரியதாகவே இருக்கும். நாம் அனைவரும் தண்ணீருக்கு வௌியே தலையை வைத்து தப்பிக்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம்.

அங்குள்ள இலங்கையர்கள் ஏனைய இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான உதவிகளை செய்கின்றனர். நான் இங்குள்ள இலங்கையர்களிடம் தனது சமூகத்தை சேர்ந்த ஒருவருக்காவது தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள உதவுமாறு கோரிக்கை விடுக்கிறேன்.

ஆரம்பத்தில் நாடு திரும்ப பதிவு செய்த பெரும் எண்ணிக்கையானவர்களில் அனைவரும் நாடு திரும்ப தற்போது தயார் நிலையில் இல்லை. தற்போதைய புதிய போக்குடன் (புதிய தொழில்வாய்ப்புகள் கிடைக்கப் பெற்ற நிலையில்) தற்போது சுமார் 12,000 பேர் வரை (பதிவு செய்தவர்கள் 50 சதவீதமானவர்கள்) மட்டுமே தூதரக ஏற்பாட்டில் நாடு திரும்புகின்றனர்.

ஏற்கனவே, ஐந்தாயிரம் பேர் வரை நாடு திரும்பியுள்னர். இன்னும் 7,000 பேர் வரை உள்ளனர். அவர்கள் எதிர்வரும் வாரங்களில் நாடு திரும்புவார்கள் என்கிறார் கடந்த மே மாதம் அபுதாபிக்கான தூதுவராக பதவியேற்ற மல்ராஜ் டி சில்வா.

மேலும், அமீரக தொழில்வழங்குநர்கள் பல இலங்கை தொழிலாளர்களுக்கு உதவிகளை வழங்குவதாக நான் அறிந்தேன். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் சிக்கலான நிலையை எதிர்நோக்கும் போது அவர்கள் உதவிகளை வழங்கியுள்ளனர். சிறந்த மனிதாபிமானத்திற்கு இது சிறந்த உதாரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கையர்கள்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுமார் மூன்று இலட்சம் இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் ஒரு இலட்சம் பேர் வரை வௌ்ளை கொலர் வேலை செய்கின்றனர். இடைநிலைத் தொழிலாளர்கள், நீல கொலர் மற்றும் வீட்டுப் பணி சார்ந்த தொழிலாளர் இச்சமூகத்தில் உள்ளனர்.

அவர்களில் பெரும்பான்மையானவர்கள் (220,000 பேர்) டுபாய் மற்றும் வட அமீரகத்திலும் சுமார் 80,000 பேர் அபுதாபி மற்றும் அல் அயின் ஆகிய இடங்களிலும் வசிக்கின்றனர்.

பல நிபுணத்துவம் மிக்க இலங்கையர்களுடன் உரையாடும் போது அவர்களுடைய நிபுணத்துவமானது அமீரக தொழிற்சந்தைக்கு ஏற்றதாக இல்லை. இவ்விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி தேவையான நிபுணத்துவத்துடன் இலங்கையர்களை அனுப்பி வைக்கவேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

வைத்தியர்கள், பொறியிலாளர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள், அளவையாளர்கள் மற்றும் கப்பல் கட்டுநர்கள் போன்ற இலங்கை துறைசார் நிபுணர்கள் அமீரக தொழில் வாய்ப்புகளை பெறவேண்டும் என்றும் டி சில்வா கருத்து தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையிலான 40 வருட சிநேகபூர்வ உறவு

இலங்கைக்கும் அமீரகத்திற்குமான சிநேகபூர்வமான உறவுக்கு இவ்வருடத்துடன் 40 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இவ்வுறவானது மேலும் வலுப்பெறும் என தூதுவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கையுடன் பாரிய வர்த்தக உறவை கொண்டுள்ள நாடு ஐக்கிய அரபு இராச்சியமாகும். பொருளாதார உறவை மென்மேலும் வலுப்படுத்துவதற்கான இயலுமைகள் குறித்து நாம் கவனம் செலுத்துகிறோம்.

இலங்கையில் வளர்ந்து வரும் துறைகளான புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் ஐக்கிய அரபு இராச்சிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வரவேண்டும். சுற்றுலாத்துறையும் அவ்வாறான ஏதவுவான துறையாகும். வருடாந்தம் சுமார் 7,000 அமீரக சுற்றலாப் பிரயாணிகள் மட்டுமே இலங்கைக்கு வருகைத் தருகின்றனர். இன்னும் அதிகமானவர்களை நாம் கவரவேண்டும். அவ்வாறு அவர்கள் நாட்டுக்கு விஜயம் செய்து எமது மக்களின் விருந்தோம்பலை அனுபவித்தால் மக்களுக்கிடையான உறவை வளர்க்கவும் ஏதவாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள் (1)

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435