சீனா செல்வதற்கு புகையிரத திணைக்கள ஊழியர்களுக்கு கிடைத்த வாய்ப்பை இடைநிறுத்துமாறு புகையிரத ஊழியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பு, போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிடம் கோரியுள்ளது.
சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ள புகையிரத திணைக்கள ஊழியர்கள் 107 பேரை தெரிவு செய்ததையடுத்து வாய்ப்பு கிடைக்காத ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்தெரிவு தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு கோரியுள்ள ஒருங்கிணைப்பின் பிரதான செயலாளர் சம்பத் ராஜித்த, இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு நன்னடத்தை காலத்தில் உள்ள ஓய்வு பெறும் வயதையுடையவர்களும் உள்ளனர். மேலும் பல தடவைகள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கபட்டவர்களும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களில் உள்ளார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு வௌிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் போது பிரிவுத் தலைவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கின்றமையினால் பொருத்தமான தகைமையுடைவர்கள் வாய்ப்புக்களை இழக்கின்றனர். இது பெரும் அநீதியான செயல் என்றும் சம்பத் ராஜித்த தெரிவித்துள்ளார்.