கொழும்பு நகரிலும், நாடுமுழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளிலும் உள்ள வேலைதளங்களில் பணியாற்றும் சீன பிரஜைகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள், பொது சுகாதார சேவை பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார பிரிவின் ஏனைய பிரதிநிதிகள் குறித்த இடங்களுக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது, குறித்த வேலைத்தளங்களில் பணியாற்றும் சேவையாளர்களுக்கு வைரஸ் தொற்று தொடர்பான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன், அவர்கள் குறித்து தொடர்ந்தும் அவதானத்து டன் இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் பபா பலியவடன தெரிவித்துள்ளார்.
ஏதேனும் ஒரு வகையில், சந்தேகத்திற்கிடமான நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால், அவரை பிரத்தியேகமாக பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.