வெளிநாட்டில் வேலை தேடும் போது இசைவுச் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இலங்கையின் பிரஜையொருவர் வெளிநாட்டில் வேலை தேட முற்படும் போதே இந்த ஆவணம் பெறப்பட வேண்டும்.
இசைவுச் சான்றிதழை பெறுவதற்கான படிமுறைகள்
படி 1 : விண்ணப்பதாரர் 500 ரூபாவை பொலிஸ் தலைமையகத்தில் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெறுதல்.
படி 2 : விண்ணப்பதாரர் படிவத்தை பூர்த்தி செய்து பொலிஸ் தலைமையகம், கொழும்பு என்ற முகவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்.
படி 3 : கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகம் விண்ணப்பத்தை பார்த்து மற்றும் பகுதி பொலிஸ் நிலையத்திலிருந்து விண்ணப்பதாரர் எங்கே வசித்தார் என்ற தெளிவான அறிக்கையை சமர்ப்பித்தல் தொடர்பில் தீர்மானித்தல்.
குறிப்பு: – விண்ணப்பதாரர் இலங்கையில் வெவ்வேறு இடத்தில் இருந்தாலும் பொலிஸ் தலைமையகம் அந்த பகுதி தொடர்பான பொலிஸ் நிலையத்திலிருந்து விண்ணப்பதாரரை பற்றிய விபரங்களை தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
படி 4 : பொலிஸ் தலைமையகம் விண்ணப்பத்தை குற்றப்புலனாய்வு அதிகாரியின் (CID) பார்வைக்காக சமர்ப்பிக்கும். உள்துறை இண்டலிஜன்ஸ் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திணைக்களத்திற்கும் சரிபார்க்க அனுப்பி வைக்கப்படும்.
படி 5 : விபரங்கள் திருப்தி அளித்தால் விண்ணப்பதாரர் பொலிஸ் தலைமையகத்தில் இசைவு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்க வேண்டிய இடம்
விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை (DOP APCC) பொலிஸ் தலைமையகம், கோட்டை, கொழும்பு-01 இலிருந்து பெற வேண்டும்.
விண்ணப்பப்படிவம்
படிவத்தின் பெயர் : பொலிஸ் இசைவுசான்றிதழுக்கான விண்ணப்பம் (DOP APCC)
செயல்முறை நேரம்
3 மாதத்திற்குள்
சேவை தொடர்பான கட்டணங்கள்
பொலிஸ் தலைமையகத்தில் விண்ணப்பப்படிவத்திற்கு விண்ணப்பதாரர் 500 ரூபாவை செலுத்த வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு..
பொலிஸ் திணைக்களம்
பொலிஸ் தலைமையகம், கொழும்பு -01.
தொலைபேசி: +94-11-2421111 / +94-11-2327711-2-3
தொலைநகல்: +94-11-234553
மின்னஞ்சல்: [email protected]
நன்றி- தமிழ் வின்