சீருடை வவுச்சர்களில் மோசடி- அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

இலவச சீருடைக்கான வவுச்சர்கள் மற்றும் பாடசாலை வாசிகசாலைகளுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்ட நிதி என்பனவற்றில் ஒரு சில அதிபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அவ்வாறான அதிபர்கள் உரிய முறையில் இணம் காணப்பட்டால் அவர்களை பதிவி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (17) ஊடங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒரு சில மலையக பாடசாலைகளில் இருந்து மேற்படி விடயங்கள் தொடர்பாக எனக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக நான் கல்வி அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன். அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். அது மாத்திரமன்றி கல்வி இமைச்சின் மூலமாக மிகவிரைவில் சுற்று நிருபம் ஒன்றையும் பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவாகளின் வாசிப்பு திறனை அபிவிருத்தி செய்கின்ற நோக்கத்துடன் பாடசாலை வாசிகசாலைகளுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக பணம் வழங்கப்பட்டது. ஆனால் ஒரு சில அதிபர்கள் இந்த பணம் கிடைத்தவுடன் பாடசாலைகளில் வாசிகசாலைகளுக்கு பொறுப்பாக இருந்த ஆசிரியர்களை உடனடியாக நீக்கிவிட்டு அந்த பதவியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன் மூலம் அதிபர்கள் ஏதோ ஒரு விடயத்தை திட்டமிடுவதை தெளிவாக தெரிகின்றது. ஆனால் அதற்கு எந்த வகையில் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது. அதே நேரத்தில் சீருடைகள் தொடர்பாகவும் பல முறைப்பாடுகள் நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்துள்ளது. அதிபர்கள் சிலர் தற்பொழுது துணி வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை கல்வி அமைச்சு எந்த வகையிலும் அனுமதிக்காது. அரசாங்கம் மாணவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அந்த பணத்தை தவறான முறையில் கையாள முடியாது. பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட நிதியில் அவர்கள் உரிய முறையில் புத்தகங்களை கொள்வனவு செய்து அவற்றை முறையாக பட்டியலிட்டு அதனை வாசிகசாலைக்கு பொறுப்பான ஆசிரியர் கையொப்பமிட்டு அதனை அதிபர் உறுதிப்படுத்தி கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைக்க வேண்டும். (66 இலக்க பத்திரம் பூர்த்தி செய்யப்பட்டு கல்வி அமைச்சிற்கு கிடைக்க கூடிய வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.)

அதனை ஒரு சில அதிபர்கள் தவறாக பயன்படுத்தினால் அவர்களை எந்த காரணம் கொண்டும் மன்னிக்க முடியாது. இது தொடர்பாக பெற்றோர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை நலன்விரும்பிகள் ஆகியோரும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

அவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக எந்தவித தயவு தாட்சன்யமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் – என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ;ணன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435