
நாடு முழுவதும் பணியாற்றும் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி அதிகாரிகள் சுகயீன லீவு போராட்டத்தை இன்று (18) மேற்கொண்டுள்ளனர்.
கமத்தொழில் சேவை திணைக்களத்தின் கீழ் நாடு முழுவதும் பணியாற்றும் சுமார் 10,000 விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி அதிகாரிகள் இன்றைய சுகயீன லீவு போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர் என்று அச்சங்கத்தின் தலைவர் காமினி ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
சம்பள பாகுபாடுகளை நீக்குதல், பதவியுயர்வுக்கான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தற்போது நிலவும் பிரச்சினைகள் தொடரபில் கமத்தொழில் அபிவிருத்தி ஆணையாளர் நாயகத்துடன் பல தடவைகள் கலந்துரையாடியும் இதுவரை உரிய தீர்வுகள் எட்டப்படாத நிலையில் இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் காமினி ஹெட்டியாராய்ச்சி மேலும் தெரிவித்தார்.
தமது சங்க அங்கத்தினர்களுக்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்றும் கமத்தொழில் அபிவிருத்தி ஆணையாளர் நாயகத்துடன் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அக்கலந்துரையாடலில் தீர்வு எட்டப்படாவிடின் எதிர்காலத்தில் இதையும் விட கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஹெட்டியாராய்ச்சி மேலும் தெரிவித்தார்.