சுகாதார அமைச்சர் மற்றும் பிரதி சுகாதார அமைச்சர் ஆகியோர் சட்டவிரோதமாக அரசாங்க வாகனங்களை பயன்படுத்துகின்றமை தொடர்பில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மேற்கொள்ளுமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று (10) பொலிஸ் நிதி மோசடி பிரிவில் முறைப்பாடு செய்துள்ளது.
சட்டரீதியாக 3 வாகனங்களை மட்டுமே சுகாதார அமைச்சர் பயன்படுத்த முடியும் எனினும் அவர் தற்போது 18 வாகனங்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது என்று வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரீத அளுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதியமைச்சரும் 3 வானங்களை மாத்திரமே பயன்படுத்த முடியும் எனினும் அவர் 11 வாகனங்களை பயன்படுத்துகிறார். இவ்விடயம் தொடர்பில் தேசிய கொள்வனவு ஆணைக்குழுவினால் கடந்த மே மாதம் 22ம் திகதி வௌியிடப்பட்ட அறிக்கை, கணக்காய்வாளர் அறிக்கை என்பவற்றை மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
வழிமூலம்- அத/ வேலைத்தளம்