சுகாதார துறையை சார்ந்த இரண்டு தொழில் துறையினரின் சீருடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
குடும்பலநல உத்தியோகத்தர் மற்றும் பொது சுகாதார உத்தியோகத்தர் ஆகியோரின் சீருடையில் மாற்றத்தை ஏற்படுத்த சுகாதார அமைச்சர் மருத்துவர் ராஜித சேனாரட்ன யோசனை முன்வைத்துள்ளார்.
புதிய சீருடை தொடர்பில் யோசனைகளை முன்வைக்குமாறு சம்பந்தப்பட்ட தொழிற்சங்க தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த யோசனைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், மீண்டும் கலந்துரையாடல் நடத்தி இறுதித் தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.