சுங்கப் பணியாளர்களின் போராட்டம் முடிவுக்குவரும் அறிகுறி

சுங்கத் திணைக்களப் பணியாளர்கள் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்கப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நிதி அமைச்சின் மேலதி செயலாளர் எச்.ஜி.சுமனசிங்க சுங்கத் திணைக்கள பதில பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

சுங்கத் திணைக்களப் பணிப்பாளராக கடமையாற்றிய பீ.எஸ்.எம்.சார்ளஸிற்கு பதிலாக கடற்படையின் ஓங்வபெற்ற அதிகாரி ஒருவரை நியமித்ததைக்கு சுங்கப் பணியாளர்கள் நேற்று முன்தினம் முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக நேற்றைய தினம் 75வீத பணிகள் முடங்கியிருந்ததுடன், சுமார் 3 பில்லியன் முதல் 4 பில்லியன் ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது சுங்கத் திணைக்கள பதில் பணிப்பாளராக நிதி அமைச்சின் மேலதிக செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், சுங்கத் திணைக்களப் பணியாளர்களின் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

சிலநேரம் அவர்கள் இன்றைய தினம் போராட்டத்தைக் கைவிடக்கூடிய தீர்மானத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435