கொவிட் 19 இரண்டாம் அலை பரவலின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் பிரச்சினை குறித்து வர்த்தக வலய ஊழியர்களுடைய தேசிய மத்திய நிலையத்திற்கும் முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
நேற்றுமுன்தினம் (20) மாலை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
வர்த்தக வலய ஊழியர்களின் சுகாதார பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு மற்றும் சம்பள கொடுப்பனவு, விடுமுறை ஆகிய பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது என மத்திய நிலையத்தின் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில், அமைப்பாளர் பி. ஹெட்டியாராச்சி உட்பட பியகம, கட்டுநாயக்க வர்த்தக வலய பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.