வௌிநாட்டில் பணியாற்றி நாடு திரும்பிய பின்னர் சுயதொழில் ஆரம்பித்துள்ள திருகோணமலையைச் சேர்ந்த 79 பேருக்கு 1,754,406.00 ரூபா நிதியினை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பகிர்ந்தளித்துள்ளது.
திருகோணமலை பட்டினமும் சூழலும் சூழலும் பிரதேசசபைப்பிரிவில் சுயதொழிலில் ஈடுபட்டுள்ள வௌிநாட்டில் பணியாற்றி நாடு திரும்பியவர்களுக்கே இவ்வாறு தலா 25,000 ரூபா நிதியுதவி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டிலிருந்து நாடு திரும்பி ஐந்து வருட காலத்திற்குள் சுயதொழிலை ஆரம்பித்துள்ளவர்கள் அத்தொழிலை மேலும் அபிவிருத்தி செய்துக்கொள்வதற்கு உதவும் வகையில் இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் விண்ணப்பங்களை அலுவல அதிகாரிகள் கள விஜயம் மேற்கொண்டு தெரிவு செய்யப்பட்ட பின்னர் இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், திருகோணமலை மேலதிக மாவட்டச் செயலாளர் அருண் தவராசா, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிதி பிரதேச செயலாளர் ஏ.பீ.எ, அபேரத்ன, பிரதி பொது முகாமையாளர் (சமூக அபிவிருத்தி) பி.பி. வீரசேக்கர, உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2019 ஜூன் ஜனவரி தொடக்கம் ஜூன் மாதம் வரையில் வெளிநாட்டில் இருந்த நாடு திரும்பி சுயதொழில் ஆரம்பித்துள்ள 128 பேருக்கு 905,774 ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.