சுரண்டலுக்குள்ளாகும் கட்டார் புலம்பெயர் தொழிலாளர்கள்

கட்டாரில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த நாட்டுக்கு செல்லவிடாது சுரண்டலுக்குள்ளாக்கப்படுவதாக தொழிலாளர் உரிமை பாதுகாப்பு அமைப்பு மற்றும் தொழிற்சங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நோபாளம், இந்தியா, பங்களாதேஷ் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களே இவ்வாறு சுரண்டல்களுக்குள்ளாவதாக அத்தொழிற் சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2022ம் ஆண்டு நடத்தப்படவுள்ள உலக கிண்ண காற்பந்தாட்ட போட்டிகளை நடத்துவதற்கு பல்வேறு கட்டுமானப்பணிகளை கட்டார் அரசு முன்னெடுத்துள்ளது. அப்பணிகளில் அதிக எண்ணிக்கையான புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பணியில் இணைத்துக்கொள்ளப்படும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய முறை மற்றும் புதிய தொழில் இலகுவாக இணைவதற்குமான செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் ஊழியர் உரிமைகள் பேணுதல் மற்றும் தொழிற்சங்கங்களின் அறிக்கைக்கமைய புதிய சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட நிறுவனங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களின் உரிமைகளை மீறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நியாயமான தீர்வு பெற்றுக்கொடுக்கும் வரை தொடர்ந்தும் உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்வதாக குறித்த அமைப்பு மற்றும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435