சுற்றலாத்துறை சார்ந்தோருக்கு மகிழ்ச்சியான அறிவித்தல்

சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலாத்துறை நிறுவனங்கள் மற்றும் நபர்களின் பதிவுகளை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை ஒரு வருடத்திற்கு அறவிடாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின்பேரில், சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, தற்சமயம்வரை அந்த கட்டணத்தை செலுத்தியுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அடுத்த வருடம் குறித்த கட்டணத்தை செலுத்துவதிலிருந்து விலக்களிப்பு செய்யப்படவுள்ளது.

இதேநேரம், இந்த ஆண்டுக்கான பதிவை புதுப்பிக்காதுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள், கட்டணம் செலுத்தாமல் பதிவுகளை புதுப்பித்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19 காரணமாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  அதில் ஈடுபடுபவர்களுக்கு நிவாரணம் வழங்கும் குறுகிய கால வேலைத்திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435