சுற்றுலாத்துறைசார் சாரதிகளுக்கு பயிற்சிகள் வழங்குவது தொடர்பான ஒப்பந்ததில் இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபை ஆகிய கையெழுத்திட்டுள்ளன.
நாடு பூராவும் உள்ள சுற்றுலாத்துறைசார் சாரதிகள் தமது பணியை சிறப்பாக முன்னெடுப்பதற்கு ஏதுவாகவும் உள்நாடு மற்றும் வௌிநாடுகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கிலும் இப்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இலங்கையில் தொழிற்பயிற்சி அதிகாரசபை 1995ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. நாட்டில் 186 தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. அதில் 22 மாவட்ட நிலையங்கள் மற்றும் 8 தேசிய பயிற்சி நிலையங்களும் தற்போது உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாத்துறைசார் சாரதிகளுக்கான பயிற்சிகள் நீர்கொழும்பு, சிலாபம், கொழும்பு, களுத்துறை, காலி, வெலிகம, மிரிஸ்ஸ, ஹிக்கடுவ, கதிர்காமம், யால, கண்டி, எல், நுவரெலியா மற்றும் பண்டாரவல ஆகிய பிரதேசங்களில் நவம்பர் மாதம் 7ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பயிற்சி நிறைவில் சான்றிதல்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.