சேவையாளர்களை மட்டுப்படுத்துவதற்கு நிர்வாக அதிகாரிகள் செயற்பட்டால் நாளை மதியம் 12 மணிக்கு முன்னர் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.
தொழிற்சங்க போராட்டங்களில் பங்கேற்ற அரச பணியாளர்களை மட்டுப்படுத்துவதற்கு நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். .