ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் 2 இலட்சம் அரச ஊழியர்கள்

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள 2019 ஜனாதிபதித் தேர்தலி கடமைகளில்  இரண்டு இலட்சம் அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் அவர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஏ.எஸ்.பி.ஜயசிங்க தெரிவித்தார்.

இந் நிலையில் தற்போது தேர்தல் கடமைகளுக்கு அரச ஊழியர்களை ஈடுபடுத்தும் விதமாக திட்டம்  தயார் செய்யப்பட்டு அதனை அமுல் செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

தேர்தல்கள் ஆணைக் குழு தகவல்கள் பிரகாரம்,  வாக்கெண்ணும் பணிகளில் மட்டும் சுமார் 48 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அதனைவிட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அரச ஊழியர்கள்  வாக்களிப்பு நிலைய பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அவர்களுக்கு மேலதிகமாக சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நலன்புரி மற்றும் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக் குழுவின் தகவல்கள் தெரிவித்தன.

குறித்த பட்சம் ஒரு வககளிப்பு நிலையத்தில் 8 அரச ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர் எனவும், வககளிப்பு நிலையத்தின் தேவைக்கு ஏற்ப அந்த எண்ணிக்கை அதிகரிக்கபப்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

மூலம் – வீரகேசரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435