ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச ஊழியர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அரசாங்கத்தினால் நாளாந்த வேதனம் பெறும் ஊழியர்கள் முதல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வரை, தேர்தல் கடமைகளில் ஈடுபடும் ஒவ்வொரு அரச ஊழியரும் தமது செயற்பொறுப்பு குறித்த சிறந்த புரிந்துணர்வுடனும், விசேட கவனத்துடனும் எவருக்கும் விசேட கரிசனை காட்டாமலும், பக்கச்சார்பின்றியும் செயலாற்ற வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எவருக்கும் அஞ்சாமல், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், நீதிமன்றத்திற்கும் மாத்திரமே தாங்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.