வடபகுதி கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர் என்று தினகரன் நாளிதல் இன்று (15) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு வடக்கு கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள, மீனவ சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து விரிவாக ஆராய்வதனூடாக அமைதியான முறையில் நிரந்தர தீர்வை எட்ட முடியும் என்று யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புக்களின் தலைவர் என். பொன்னம்பலம் கடந்த வாரம் பத்திரிகைகள் மூலம் தெரிவித்திருந்தார்.
இக்கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்த கடற்றொழில் வள அமைச்சர் இச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி கடற்றொழில் அமைச்சின் மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும் பிரதிநிதிகள் சம்மேளனத் தலைவரை தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
வேலைத்தளம்/ தினகரன்