ஜனாதிபதி அவர்களே எங்கள் குரல் கேட்கிறதா? – ஏங்கும் இலங்கையர்கள்

மாலைதீவு தலைநகர் மாலேயில் உள்ள ஹோட்டலில் பணிபுரியும் இலங்கையர்கள் தம்மை பாதுகாப்பாக தாய்நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாலே நகரில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் தங்கியுள்ள இளைஞர்கள் யுடியுப் மூலமாகவும் சமூக வலைத்தளங்களூடாகவும் தமது நிலையை விளக்கி காணொளியை வௌியிட்டுள்ளதுடன் அதில் தம்மை பாதுகாப்பாக தாய்நாட்டுக்கு அழைத்து வர இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வளவு நாளும் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளங்காணப்படவில்லை. மூன்று தினங்களுக்கு முன்னர் ஒருவர் அடையாளங்காணப்பட்டார்.மூன்று நாட்களுக்குள 56 கொவிட் 19 தொற்றாளர்கள் மாலே நகரில் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் மேலும் 75 பேர் அடையாளங்காணப்படவுள்ளனர் என்று மாலைதீவு அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முழு நகருக்குமே ஒரே மருத்துவமனையே உள்ளது. இந்நாட்டில் உள்ளவர்களும் மருத்துவதேவைகளுக்காக இலங்கைக்கே செல்கின்றனர். நாம் மிகவும் இக்கட்டான நிலையில் இங்குள்ளோம். வௌியில் செல்ல முடியாது. உணவு மிகவும் குறைவாகவே கிடைக்கிறது. நாம் 10 பேர் ஒரு அறையில் உள்ளோம். யாருக்காவது தொற்று ஏற்பட்டால் அனைவரும் பாதிக்கப்படுவோம். அவ்வாறான நிலை ஏற்படும் முன்னர் தான் நாம் உரிய அதிகாரிகளுக்கு தெரியபடுத்தி உதவி கோருகிறோம்.

மாலே நகரம் நான்கரை கிலோமீற்றர் சுற்றளவைக் கொண்டது. சுமார் பத்தாயிரம் பேர் வரை இங்கு வசிக்கின்றனர். அவர்களில் ஆயிரம் பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 56 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 75 பேர் அடையாளங்காணப்படவுள்ளனர். 210 பேருக்கு பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எமக்கு வௌியே செல்ல முடியாது. எமக்கு மிகவும் குறைவாகவே உணவு கிடைக்கிறது. காலையில் ஒரு பணிஸ் அளவு உணவுதான் கிடைக்கிறது. இது கம்பனிகளின் தவறல்ல. அவர்களால் இயலுமானவரை செய்கின்றனர். இங்கு விவசாயம் செய்ய முடியாது. அனைத்தும் வௌியில் இருந்துதான் வருகிறது. கடைகளிலும் மிகக்குறைவாகதான் விற்பனை செய்கிறார்கள். மாலைதீவு மக்களுக்கு வைத்துக்கொண்டுதான் எமக்கு கொடுப்பார்கள். இந்த அறையில் பத்து ​பேர் இருக்கிறோம். எமது கம்பனியில் 20, 30 இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். அனைவரும் மிக சிரமத்திற்கு மத்தியில்தான் இருக்கிறோம். உணவு, குடிநீர் இல்லை. சிலநேரங்களில் கடல்நீர்தான் வடிகட்டி அனுப்பப்படுகிறது.

ஜனாதிபதி அவர்களே, கடல்மார்க்கமாகவோ, விமானத்தினூடாகவோ எந்தவகையிலாவது எம்மை கூடிய சீக்கிரம் எம்மை நாட்டு அழைக்க நடவடிக்கை எடுங்கள். இந்நோய் பரவினால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த அறையில் உள்ள பத்து பேர் மட்டுமல்ல, மாலே நகரில் உள்ள அனைவரும் தாமாக முன்வந்து சுய தனிமைப்படுத்திலில் ஈடுபடுவோம். நாம் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். எமக்கு இலங்கைக்கு வரவேண்டும், முடிந்தளவு விரைவில் எம்மை நாட்டுக்கு அழைத்துக்கொள்ளுங்கள். நாம் அனைவரும் இலங்கையை நேசிக்கிறோம். ஜனாதிபதி அவர்களே எமது குரல் உங்களுக்கு கேட்குமாக இருந்தால் எம்மை நாட்டுக்கு அழைத்துக்கொள்ளுங்கள்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435