ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பொலனறுவையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இன்று நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்தததாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததன் காரணமாக பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது முதல் அனைத்து ரயில் சேவைகளையும் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு கடந்த 8ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.