ஜப்பானில் தொழில்வாய்ப்பை எதிர்பார்போருக்கான முக்கிய அறிவித்தல்

வெளிநாட்டுப் பணியாளர்களை ஜப்பானுக்குள் அனுமதிப்பது தொடர்பான பிரேரணைக்கு ஜப்பானிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவையின் அனுமதியுடனான இந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் ஷின்சோ அபேயின் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர்கூட வெளிநாட்டு பணியாளர்களை ஜப்பானுக்குள் அனுமதிப்பற்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜப்பானில் தற்போது, விவசாயம், நிர்மாண பணிகள் மற்றும் சுற்றுலாத்துறை போன்றவற்றிற்கு அதிக அளவிலான பணியாளர்கள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது ஜப்பானில் குறிப்பிட்ட சில தொழில்துறை பணியாளர்களுக்கான பற்றாக்குறையினை தீர்க்கும் முறையில் பயிற்றப்பட்ட பணியாளர்கள் ஜப்பானுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என வர்த்தக சமூகத்தவர்கள் அழுத்தத்தை வழங்கி வருகின்றனர்.

இந்தப் பிரேரணைக்கான அனுமதியை நாடாளுமன்றம் வழங்கியதன் பின்னர், சிறந்த பயிற்றப்பட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு ஐந்து வருட நுழைவு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பணியாளர்களின் குடும்பத்தவர்களுக்கு நுழைவு அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், பணியாளர்கள் வலுவான தகைமை கொள்வதுடன், ஜப்பானிய மொழியில் பாண்டித்தியம் பெறும் பட்சத்தில், ஐந்து வருட நுழைவு அனுமதி புதுப்பிக்கப்படுவதுடன், நிரந்தர வதிவிட அனுமதியும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படியானவர்கள் தங்களது குடும்ப அங்கத்தவர்களையும் ஜப்பானுக்கு அழைத்து ஒன்றாக வாழ முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் ஜப்பானுக்குள் தொழில்வாய்ப்பினை பெற்று நுழைவதற்கு கடுமையான குடிவரவு சட்ட திட்டங்கள் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435