ஜப்பானில் பரவும் அபயாகரமான வைரஸ்

சில மணி நேரங்களில் மனித உயிரை பறிக்கக்கூடிய வைரஸ் ஒன்று தற்போது ஜப்பானில் பரவி வருவதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இவ்வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு தசை கரையும் நோய் அறிகுறிகள் ஏற்படுவதுடன் தற்போது இவ்வைரஸ் தொற்றுக்குள்ளான 500 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

1999 ஆம் ஆண்டு ஜப்பானில் இவ்வபாயகரமான வைரஸ் அடையாளங்காணப்பட்டது. தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 66 பேரும் கனகாவ நகரில் 44 பேரும் இவ்வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

STSS என்ற பெயரில் அடையாளப்படுத்தியுள்ள இவ்வைரஸானது மனித உடலில் புகுந்து நுரையீரல், சிறுநீரகம், இதயம் வரை பரவினால் சில மணிநேரங்களில் மரணம் சம்பவிக்கும். உடலில் இவ்வைரஸ் தொற்றியதும் காயம் ஏற்படும் என்றும் அதனூடாக முழு உடம்பிலும் பரவும் என்றும் நம்பினாலும் உறுதியான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

காய்ச்சல், தலைவலி, வாந்திபோதல், உடல் நோ போன்றன இவ்வைரஸ் தொற்றின் அறிகுறிகளாகும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435