ஜி.எஸ்.பி வரிச் சலுகை பெற 58 நிபந்தனைகள்

ஜி.எஸ்.பி வரிச் சலுகையை மீண்டும் பெற்றுகொடுப்பதற்கு 58 நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ளது என்று தகவல்கள் வௌியாகியுள்ளன.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குதல், அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீதான வழக்குகளை துரிதப்படுத்துதல, புதிய மனித உரிமை செயற்பாட்டை அறிமுகப்படுத்தல், புதிய அரசியலமைப்பினூடாக அதிகாரப்பகிர்வுக்கு வழிவகுத்தல், வடக்கிலுள்ள தனியார் நிலங்களை மீண்டும் உரிமையாளர்களுக்கு கையளித்தல் மற்றும் தேசிய நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்றத்திற்கான கொள்கையை அறிமுகப்படுத்தல் உட்பட பல முக்கிய நிபந்தனைகள் இதில் உள்ளடங்குகின்றன.

இதற்கு முன்னர் கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் புதிய மனித உரிமை மேம்பாட்டை எதிர்பார்ப்பதாக கூறியிருந்தது.

எது எவ்வாறிருப்பினும் நிபந்தனைகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரச கலந்துரையாடுவதுடன் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளன.

 இக்கலந்துரையாடலின் முன்னேற்றங்களுக்கமைய இன்னும் ஒரு மாத காலத்தில் இலங்கைக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகை உத்தியோகப்பூர்வமாக வழங்குமாறு இலங்கை அரசு ஐரோப்பிய ஒன்றியத்திடன் உத்தியோகப்பூர்வமாக கேட்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435