இலங்கையிலுள்ள வைத்தியர்களுக்கான வெற்றிடங்கள் எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் நிரப்பப்படும் என்று சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாராஹேன்பிட்டவில் உள்ள தேசிய இரத்த வங்கியில் நடைபெற்ற மாகாண சுகாதார அமைச்சர்ளுக்கான மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் காணப்பட்ட 3800 மருத்துவ வெற்றிடங்களில் 1800 நிரப்பப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனூடாக மாகாணங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அநீதியற்ற வகையில் வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களை நியமிக்கும் போது அரச வைத்தியர் சங்கத்தின் தேவைக்கமைய நடைமுறைப்படுத்த முடியாது என்றும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
வேலைத்தளம்