டுபாயில் சட்டவிரோத மதுபான (கசிப்பு) தயாரிப்பில் ஈடுபட்ட இலங்கை பெண்ணொருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பஹிலா பிரதேசத்தில் நடத்தப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது பெரியளவில் சட்டவிரோத மது உற்பத்தியை மேற்கொண்ட இலங்கைப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சுற்றிவளைப்பின் போது 10 பீப்பாய் மதுபானம் தயாரித்து விற்பனைக்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த 400 போத்தல் மதுபானம், 13 குழாய்கள், வடிப்பான் மற்றும் மதுபானம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகத்துக்குரியவகையில் நடவடிக்கைகள் இருப்பதாக தகவல் கிடைத்ததாகவும் இதனையடுத்து நீண்டநாட்கள் கண்காணிப்பு மேற்கொண்டு திடீர சுற்றிவளைப்பில் ஈடுபட்டதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேலைத்தளம்/ அரப் நியூஸ்