ஒருவழி ටபயண அனுமதியுடன் டுபாய் விமானநிலையத்திற்கு சென்றடைந்த 30 எத்தியோப்பிய பெண்களை குடிவரவு அதிகாரிகள் திருப்பியனுப்பியுள்ளனர்.
எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து டுபாய் வந்தடைந்த குறித்த பெண்கள் டுபாய் விமான நிலையத்தின் முனையம் 2 இல் வைத்து குடிவரவு அதிகாரிகள் பரிசோதித்த போது ஐக்கிய இராச்சியத்தில் நுழைவதற்கான செல்லுபடியாகும் வருகை விசாவை வைத்திருந்தனர் என்றும் தொடர்ந்து பயணம் செய்வதற்கான அனுமதியோ அல்லது திரும்பிச் செல்வதற்கான டிக்கட்டோ வைத்திருக்கவில்லை என்று பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் குடிவரவு சட்டத்தின் படி நாட்டில் உள்நுழைபவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான ஆதாரத்தை விசா காலாவதியாக முன்னர் சமர்ப்பித்தல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்