தகமையுள்ள திறமையான அதிகாரிகளுக்கு கல்வித்துறையில் உள்ள வெற்றிடங்களுக்கு உள்வாங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்படும் அதிகாரிகளை தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவுள்ளது. இதேபோல் எதிர்வரும் காலத்தில் கல்விப்பணிப்பாளர் பதவிகளுக்கும் தகமையுடைய திறமையானவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும். இத்தனைக்காலம் பதவியுயர்வு வழங்குவதில் காணப்பட்ட தாமதத்தை தவிர்ப்பதற்கும் கல்வித்துறையில் காணப்படும் பதவி வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கும் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் சேவை தரம் 1இற்கு பதவியுயர்வு பெற்ற 263 பேருக்கான நியமனக்கடிதங்கள் கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.