தீபாவளி முற்கொடுப்பனவு கோரி நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு, கீழ்பிரிவு மக்கள் இன்று (23) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு வழங்கப்பட வேண்டிய 10,000ர ரூபா இன்று வழங்குவதாக கூறி வாக்குறுதி அளித்த தோட்ட நிர்வாகம், இன்று வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்தமையினாலேயே இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை முற்பணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமெனவும் மலையக அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை இந்த ஆர்பாட்டம் குறித்து தோட்ட முகாமையாளரிடம் கேட்டபோது எதிர்வரும் 25ம் திகதி தீபாவளி முற்பணம் வழங்கபடுமென உறுதியளித்தார்.
வேலைத்தளம்