RTI தகவல்களை வெளிப்படுத்துவதில் இன்னும் முன்னேற்றம் தேவை

தகவல் அறியும் உரிமைச் சட்ட அமுலாக்கலில் இலங்கை நடுத்தர மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது. இருப்பினும் தாமாகவே தகவல்களை வெளிப்படுத்துவதில் இன்னும் முன்னேற்றம் தேவை  

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடத்தக்க தாக்கமான விளைவை உறுதிப்படுத்த, அரசாங்கமும்  பொதுமக்களும் மிகவும் அர்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் குறிப்பிடுகின்றது. உலகலாவிய ரீதியில் தகவலுக்கான உரிமைச்சட்ட தரவரிசைப்படுத்தலில் இலங்கைக்கு 4வது இடம் கிடைக்கப்பெற்றிருப்பதானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வலிமையை பிரதிபலிக்கின்ற போதும், 2019ம் ஆண்டுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அமுலாக்கம் தொடர்பான மதிப்பீட்டில் இலங்கை மஞ்சள் நிற தரத்தையே பெற்றுள்ளமை கவனத்திற்குரியது.

TISLன் இந்த மதிப்பீட்டின் பிரதான நோக்கமாக அமைவது தகவலறியும் உரிமைச் சட்டத்தின் நடைமுறைத் தன்மையினை மதிப்பிடுதல் ஆகும். இதனை தாமாக வெளிப்படுத்தல், நிறுவன ரீதியான நடவடிக்கைகள் மற்றும் கோரிக்கைகளைச் செயற்படுத்துதல் ஆகிய மூன்று மதிப்பீட்டுப் பகுதிகளை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. மதிப்பிடப்பட்ட மூன்று பகுதிகளில், இலங்கை தாமாக வெளிப்படுத்தலுக்காக  சிவப்பு நிறத் தரத்தையும், நிறுவன நடவடிக்கைகள் மற்றும் கோரிக்கைகளை செயலாக்குவதற்கு மஞ்சள்  நிறத் தரத்தைப் பெற்றுள்ளது.

இம் மதிப்பீட்டிற்கான அணுகுமுறையானது “தகவல் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்போரின் வலையமைப்பிடமிருந்து” உள்வாங்கப்பட்டதுடன் இது தகவலறியும் உரிமையினை ஊக்குவிக்கின்ற, இவ்விடயம் தொடர்பில் பணிபுரிகின்ற நிறுவனங்கள் மற்றும் தனியாரின் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு சர்வதேச வலையமைப்பாகும். FOIAnet ஒரு நாட்டின் RTI செயல்படுத்தலை மதிப்பிடுவதற்கு வண்ண தர நிர்ணய முறையையும் மதிப்பெண் முறையையும்  பயன்படுத்துகிறது. தர வரிசைப்படுத்தலுக்கமைய பின்வரும் நிறங்களானவை; சிவப்பு (கணிசமான அளவு முன்னேற்றம் அவசியம்), மஞ்சள் (சாதாரன முன்னேற்றம் அவசியம்), பச்சை (ஓரளவு முன்னேற்றம் அவசியம்) என்பதை குறிக்கின்றது.

TISL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர இது தொடர்பாக தெரிவிக்கையில், TISL இன் நாடுதழுவிய ரீதியிலான RTI செயற்பாடுகளும் இந்த மதிப்பாய்வில் பிரதிபலித்துள்ளதெனவும் குறிப்பாக தாமாக வெளிப்பதலிலுள்ள குறைபாடுகளை நிவத்திக்க அரசு உடனடி அவதானத்தை செலுத்த வேண்டும் ஏனெனில், அது ஊழலை தடுப்பதற்கான திறவுகோலாக காணப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்தார்.

ஒபேசேகர மேலும் அவர்கள் குறிப்பிடுகையில், பொது நிறுவனங்களில் தேசிய மட்டத்தை விட மாகாணம் மற்றும் மாவட்ட அடிப்படையில் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. பொதுமக்களுடன் செயலாற்றும் அரச நிறுவனங்களில் கீழ் மட்டத்திலுள்ள நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படுவதனால் இதனுடாக RTI ஐ நடைமுறைப்படுத்துவதையும் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்தை நோக்கி விரைவாக மேம்படுத்த முடியும் என்பது தெளிவாகின்றது என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435