வேலையின்மையினால் பாதிக்கப்படும் இளைஞர் யுவதிகள்

கடந்த ஆண்டு இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது மூன்றாம் காலாண்டில் வேலையின்மை பிரச்சினை 4.9 வீதத்தில் இருந்து 5.1 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வணிக நடவடிக்கைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கான காரணம் என்று திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2019ம் ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் தொழிலற்றவர்களின் எண்ணிக்கை 437,797 ஆகும் பொருளாதாரரீதியாக செயற்றிறன் உள்ளவர்களின் எண்ணிக்கை 8.6 மில்லியன் ஆகும். அவர்களில் 65.2 வீதமானவர்கள் ஆண்கள். 34.8 வீதமானவர்கள் பெண்கள். இலங்கையில் 7.9 மில்லியன் பேர் பொருளாதார ரீதியாக செயற்றிறன் அற்றவர்களாக உள்ளனர். அவர்களில் 26.5 வீதம் ஆண்களும் 73.5 வீதமானவர்கள் பெண்களுமாவர்.

குறிப்பாக 30 – 39  (95.9 %) வயதுக்குட்பட்டவர்களே பொருளாதாரரீதியாக செயற்றிறன் மிக்கவர்களாக உள்ளனர்.
பெண்களில் 45 – 49 வயதானவர்களே பொருளாதார பங்களிப்பை வழங்குபவர்களாக உள்ளனர். இது மொத்த சனத்தொகையில் 48.0 வீதமாகும்.

மூன்றாம் காலாண்டை நோக்கும் போது நாட்டில் பணிபுரிவோர் மொத்த சனத்தொகையில் 8.2 மில்லியன் பேராவர். அவர்களில் 47.7 பேர் சேவைத்துறையிலும் 27 சதவீதமானவர்கள் கைத்தொழிற்றுறையிலும் 25.3 வீதமானவர்கள் விவசாயத்துறையிலும் பணியாற்றுகின்றனர். இது 2018ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் 2019ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டை ஒப்பிடுகையில் விவசாயத்துறையிலும் சேவைத்துறையிலும் பணிபுரிவோரின் எண்ணிக்கையில் வளர்ச்சியேற்பட்டுள்ளது.

மிக உயர்ந்த வேலைவாய்ப்பு சேவைத் துறையில் காணப்படுகிறது. இது ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கும் பொருந்தும், அதே நேரத்தில் மிகக் குறைந்த வேலைவாய்ப்பு பங்குகள் விவசாயத் துறையில் காணப்படுகின்றன.

வேலை செய்யும் பெண்களில், 26.3% விவசாயத் துறையில் உள்ளனர், இதில் ஆண்களின் பங்களிப்பு 24.8% ஆகும். தொழிலின்றி இருப்பவர்களில் 8.5 வீதம் பெண்களும் 3.3 வீதம் ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

2019 ஆம் ஆண்டின் 3 வது காலாண்டை நோக்கும் போது இளைஞர்களின் வேலையின்மை வீதம் 23.3% ஆகும். 15-24 வயதுடையவர்களே இதில் அதிகம் உள்ளடங்குகின்றனர். இது அனைத்து வயதினரிடையேயும் அதிகபட்ச வேலையின்மை வீதமாகும். மேலும் 15-24 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேலையின்மை வீதம் முறையே 17.5 மற்றும் 33.9% ஆகும்

இவ்வேலையின்மை பிரச்சினையினால் இளைஞர் யுவதிகள் என இரு பாலாரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக G.C.E (A / L) தகமையுடையவர்களே வேலையின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4.8 வீதம் ஆண்களும் 12.9 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அனைத்து மட்டங்களிலும் ஆண்களை விடவும் பெண்களே வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறு இருப்பினும் கற்ற ஆண்களை விடவும் கற்ற பெண்களே தொழிலின்மையினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

FT/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435