தங்க பிஸ்கட்டுகளுடன் சுங்கத்தீர்வையற்ற வர்த்தக நிலைய ஊழியர் கைது

சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்களை வெளியே கொண்டு செல்ல முயன்ற கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கத்தீர்வையற்ற  வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு தங்க பிஸ்கட்களுடன் கைது செய்யப்பட்டவராவார்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணியளவில் விமான நிலையத்திலிருந்து தனது காற்சட்டையின் இரு பொக்கட்களுக்குள்ளும் தங்க பிஸ்கட்டுக்களை மறைத்துக் கொண்டு வெளியே கொண்டு செல்வதற்கு முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒவ்வொன்றும் 100 கிராம் எடையுடைய 40 தங்க பிஸ்கட்டுக்களைக் கைப்பற்றியுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்துள்ள பயணி ஒருவரினால் கைது செய்யப்பட்ட நபரிடம் இந்த தங்க பிஸ்கட்கள் வழங்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்கா விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435